நரிக்குடி : மாவட்டத்தில் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் தீவிரமாக நடக்கிறது

நரிக்குடி : மாவட்டத்தில் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் தீவிரமாக நடக்கிறது. எனினும் தபால் ஓட்டு விண்ணப்பங்கள் மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கு முழுமையாக கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசியல் கட்சி வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்து வருகிறது. ஓட்டுப்பதிவுக்கு இன்னும் ஒன்பது நாட்களே உள்ளது. இந்த தேர்தலில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் தீவிர முனைப்புக்காட்டி வருகிறது. இதற்காக தினமும் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படுகிறது. எனினும் தபால் ஓட்டு விண்ணப்பங்களை முறையாக வழங்காமல் மந்த நிலைலேய நீடித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மாற்றுத்திறனாளிகள், 80 வயதைக் கடந்த முதியவர்களிடம் தபால் ஓட்டுக்களை பெற படிவம் ’12 டி’ ஐ தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நேரடியாக சென்று வழங்க வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்கள், போலீசார்களுக்கு அந்தந்த துறை மூலம் படிவம்…

Read More

தி.மு.க., கூட்டணிக்கு தான் வெற்றி

திருச்சுழி : திருச்சுழி சட்டசபைதொகுதி தி.மு.க., வேட்பாளர் தங்கம்தென்னரசு எம்.எல்.ஏ., நேற்று பிரசாரத்தை துவங்கினார். காரியாபட்டி, பாலையம்பட்டி, அருப்புக்கோட்டை, கத்தாளம்பட்டி, பசும்பொன்,வீரசோழன், மறையூர், திருச்சுழியில் உள்ள தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.சமுதாய உறவின்முறை நிர்வாகிகளை சந்தித்து ஆசி பெற்றார். அவர் கூறியதாவது: தி.மு.க., தலைமையிலான மதச்சார்பாற்ற முற்போக்கு கூட்டணி 234 தொகுதிகளிலும், வெற்றி பெறும். ஸ்டாலின் முதல்வராவது உறுதி என்றார்.

Read More

கல்லுாரியில் கருத்தரங்கு

காரியாபட்டி : காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரியில் ‘மாணவர்களுக்கு இன்றைய முன்முயற்சி மூலம் நாளைய தலைவர்களை உருவாக்கும் முயற்சிகள்’ எனும் தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. கல்லூரி நிறுவனர் முகமது ஜலீல் தலைமை வகித்தார். முதன்மை நிர்வாக அதிகாரி சீனி முகைதீன், இணை முதன்மை நிர்வாக அதிகாரி சீனி முகமது அலியார் மரைக்காயர் முன்னிலை வகித்தனர். நிர்வாக இயக்குனர் நிலோபர் பாத்திமா வரவேற்றார். முதல்வர் செந்தில்குமார் அறிக்கை வாசித்தார்.தேசிய திறன் மேம்பாட்டு கழக தலைவர் ஜெயகாந்த் சிங், நேவிகேட் கன்சல்டன்ட் நிறுவன திட்ட இயக்குனர் பூனம் சர்மா, ஜான் மோரிஸ் நிறுவன பங்குதாரர் ஜான் மோரிஸ் பேசினர். கொரிய மொழி, கலாச்சார தொடர்புக்கான உறுப்பினர் சுகில், பெஸ்காம் நிறுவன பொது மேலாளர் நந்தினி பாலசுப்ரமணியம், உணவு உற்பத்தி செயலாக்க ஆட்சிக் குழு தலைவர் பாலகிருஷ்ணன் செட்டி ஆகியோர் இணைய…

Read More

கற்போருக்கு பயிற்சி தேர்வு

காரியாபட்டி : மாவட்டத்தில் 3 லட்சத்து 35 ஆயிரத்து 825 கல்லாதோர் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மூலம் எழுத்தறிவு கற்பிக்கப்படுகிறது. பெண்கள் எழுத்தறிவு சதவீதத்தை உயர்த்தும் பொருட்டு 615 கற்போர் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முதற்கட்டமாக 25 ஆயிரத்து 6 கற்போருக்கு அடிப்படை கல்வி அறிவு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி தெரிவித்தார்.

Read More

வாழ்வதற்கு வழியில்லை; வனத்தில் குடியேறிய மக்கள்

காரியாபட்டி – தொடர் மழையால் விவசாயம் பாதிக்கப்பட்டு கடனை அடைக்க முடியாமல் சிரமத்தில் தவித்த விவசாயிகளுக்கு வெள்ளரி விவசாயம் கை கொடுப்பதால் மகிழ்ச்சியில் உள்ளனர்.காரியாபட்டி கிராமங்கள் நிறைந்த விவசாயம் சார்ந்த பகுதி. நெல், கடலை, வெங்காயம், பருத்தி உள்ளிட்ட விவசாயங்கள் முக்கியமானவை. சில ஆண்டுகளாக சரிவர மழை பெய்யாமல் விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டது. இந்தாண்டு நல்ல மழை பெய்யும் என விவசாயிகள் நம்பி கடன் வாங்கி விவசாயம் செய்த நிலையில் பலன் கொடுக்கும் நேரத்தில் தொடர் மழையால் அனைத்து விவசாயமும் கடுமையாக பாதிக்கப்பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது.இதை தொடர்ந்து காரியாபட்டி எஸ்.மறைக்குளம், தேனுார், முடுக்கன்குளம் பகுதியில் காடுகளில் விதைக்கப்பட்ட வெள்ளரி செடிகள் தற்போது பலன் கொடுத்து வருவாய் ஈட்டி தருவதால் பெரும்பாலான விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Read More

இ–சேவை மையத்தில் டோக்கன்: அதிகாலை முதல் காத்திருக்கும் மக்கள்

காரியாபட்டி: இ–சேவை மையத்தில் டோக்கன் வழங்கும் முறையால் புதிய ஆதார் அட்டை பெறவும், பெயர், முகவரி திருத்தம் செய்ய விரும்புவோர் அதிகாலையிலிருந்து காத்திருந்து டோக்கன் வாங்க வேண்டிய நிலையில் சிரமப்படுகின்றனர். காரியாபட்டி மற்றும் அதன் சுற்று கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் புதிய ஆதார் அட்டை பெற, முகவரி, அலைபேசி எண், போட்டோ திருத்தம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக தாலுகா அலுவலகத்தில் உள்ள இ–சேவை மையத்துக்கு வருகின்றனர். தனியார் ஒப்பந்த அடிப்படையில் செயல்பட்டு வரும் இம்மையத்தில் தினமும் 40 பேர் மட்டுமே இப்பணிகளுக்காக அனுமதிக்கப்படுகின்றனர். டோக்கன் பெற்றால் மட்டுமே இப்பணிகளை மேற்கொள்ள முடியும் என்பதால் விவரம் அறியாதவர்கள் ,பல நாட்கள் அலைந்து செல்லவேண்டிய நிலை உள்ளது. டோக்கன் வாங்கவும் அதிகாலை 5:00 மணிக்கு தாலுகா அலுவலகத்தில் வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்களுக்கு 9:30 மணிக்கு பின்பே டோக்கன் கொடுக்கின்றனர்.…

Read More

மதுரை விவசாயிகள் தாராளம்: ஆவியூர் விவசாயிகள் நெகிழ்ச்சி

காரியாபட்டி : பூச்செடிகள் அழிந்தாலும் பரவாயில்லை தண்ணீர் கொண்டு செல்லுங்கள் என கூறிய மதுரை விவசாயிகளை கண்டு ஆவியூர் கிராமத்தினர் நெகிழ்ச்சி அடைந்தனர். காரியாபட்டி பகுதியில் கனமழை, புரவி புயலுக்கு நிரம்பாத பெரிய கண்மாய்களில் ஆவியர் கண்மாயும் ஒன்று. இதற்கு முக்கிய காரணம் வரத்துக்கால்வாய் இல்லாதது தான். கண்மாய் வறண்ட நிலையில் காணப்பட்டதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு விவசாயம் பாதிக்கப்படும் சூழ்நிலை இருந்தது. இந்நிலையில் நிலையூர் கால்வாயில் வைகை ஆற்றிலிருந்து வந்த தண்ணீரை பகிர்ந்தளிக்க ஆவியூர் மக்கள் கோரிக்கை விடுத்தனர். அக்கால்வாய் பாசனத்தில் பயன்பெறும் மதுரை மாவட்ட கிராமத்தினர் மறுத்தனர். ஆவியூர் ஊராட்சித் தலைவர் தனலட்சுமி ரவி மதுரை மாவட்ட கிராம உள்ள விவசாயிகளிடம் உருக்கமாக பேசியதை யடுத்து தண்ணீர் திறந்துவிட சம்மதித்தனர்.இரவும் பகலும் பாராமல் வரத்துக்கால்வாய் ஏற்படுத்தி தண்ணீர் கொண்டு வந்ததையடுத்து கண்மாய்க்கு ஓரளவிற்கு தண்ணீர்…

Read More

தொடர் மழையில் முளை விட்ட பயிர் சோகத்தில் விவசாயிகள்

திருச்சுழி: தொடர் மழையால் அறுவடை செய்ய முடியாமல் பயிர்கள் முளை விட்ட நிலையில் பாழாகுவதால் விவசாயிகள் சோகத்தில் உள்ளனர். திருச்சுழி அருகே எம். ரெட்டியபட்டி, பரளச்சி, கத்தாளம்பட்டி, மறவர் பெருங்குடி, முத்துராமலிங்கபுரம் உட்பட பல கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கர் மேற்பட்ட விவசாய நிலங்களில் சோளம், மக்காச்சோளம், கம்பு, திணை, உளுந்து, பாசி, மிளகாய், மல்லி போன்ற பயிர்களை விளைவித்திருந்தனர். நன்கு விளைந்து அறுவடை நேரத்தில் தொடர் மழையால் பயிர்கள் பாழாகி விட்டன. கதிர்களை அறுக்க முடியாமல் போனதால் திரட்சியான கதிர்களில் முளை விட துவங்கின. பயிர்கள் அழுகி போனால் ஒட்டு மொத்த விவசாயமும் பாதிப்பு அடைந்துள்ளது.

Read More

ரமண மகரிஷி.

திருச்சுழியில் அவதாரம் பூண்ட கருணை வடிவம், மதுரையில் ஞானம் பெற்ற மகான், திருவண்ணாமலையில் முக்தியடைந்த பரமாத்மா என ஜீவ ஒளி தத்துவமாக அருள்பாலித்து வருகிறார் ரமண மகரிஷி. அவரது அவதார தினமான டிச.,31ல் திருச்சுழி ‘சுந்தர மந்திரம்’ கோயிலில் ரமண மகரிஷி ஜெயந்தி விழா கோலாகலமாக நடக்கிறது. ரமண மகரிஷியின் வாழ்க்கை முழுவதுமே அதிசயங்களும், ஆச்சரியங்களும், அற்புதங்களும் நிறைந்தவை. அருப்புக்கோட்டை அருகே திருச்சுழியில் சுந்தரம் அய்யர் – அழகம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்த ரமணருக்கு பெற்றோர் வைத்த பெயர் வெங்கடராமன் அய்யர். சிறு வயதிலே ஆன்மிகத்தில் நாட்டம் கொண்ட இவர் 12 வயதில் தந்தை மரணம் அடைந்தார். சித்தப்பா பொறுப்பில் வளர்ந்த ரமணர் 1891ல் மதுரை சென்றார். கல்வியில் நாட்டம் செல்லவில்லை. மீனாட்சி அம்மன் கோயிலில் அதிக நேரம் செலவிட்டார். நாயன்மார்கள் போல் நாமும் பக்தி செய்தால்…

Read More

கன மழையால் சூழந்த காட்டாற்று வெள்ளம்; கண்மாய்களில் உடைப்பால் தீவாக மாறிய குக்கிராமங்கள்

நரிக்குடி : மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழையால் காட்டாற்று வெள்ளத்தால் நரிக்குடியில் பல கண்மாய்களில் உடைப்பு ஏற்பட்டு குக்கிராமங்கள் தீவாக மாறியது . மாவட்டத்தில் துவக்கத்தில் இருந்தே வடகிழக்கு பருவமழை தீவிரம் காட்டிய நிலையில், அடுத்தடுத்து நிவர், புரெவி புயல்கள் தாக்கத்தில் மழை வெளுத்து கட்டியது. வடக்கு திசையில் இருந்து வேகமாக வீசும் காற்றால் வடகிழக்கு பருவமழை மேலும் பத்து நாட்களுக்கு தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இதன் தாக்கத்தால் நேற்று முன்தினம் இரவு மாவட்டத்தில் பரவலாக கன மழை கொட்டியது. இதனால் நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. நரிக்குடியை சுற்றிய பகுதிகளில் நேற்று முன்தினம் நான்கு மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது. இதில் உருவான காட்டாற்று வெள்ளம் கிராமங்களை சூழ்ந்து தீவுக்காடாக்கியது. நீர் வரத்து…

Read More