கொரோனாவை அழிக்கும் மருந்து பெட்டகம்

விருதுநகர் : கலெக்டர் கண்ணன் கூறியதாவது: மாவட்டத்தில் 2020 – 21 ம் ஆண்டில் மூவாயிரம் கால்நடைகளுக்கு மானியத்துடன் காப்பீடு செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோர், எஸ்.சி., எஸ்.டி., யினருக்கு 70 சதவீதம், வறுமை கோட்டிற்கு மேல் உள்ளோருக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். ஓராண்டு காப்பீட்டு கட்டணமாக கால்நடையின் மதிப்பில் 1.70 சதவீதமும், மூன்றாண்டு கட்டணமாக 4.30 சதவீதமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.

Read More

கொரோனா தொற்றால் உயிரிழந்த போலீசாருக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி.. தமிழக அரசு உத்தரவு

கொரோனா தொற்றால் உயிரிழந்த போலீசாருக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி.. தமிழக அரசு உத்தரவு தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் சுகாதார ஊழியர்கள், போலீசார் எனப் பலரும் வைரஸ் தொற்று காரணமாகவே உயிரிழக்கும் துயரங்களும் அரங்கேறியுள்ளன.சென்னை: கொரோனாவால் உயிரிழந்த 36 காவலர்களின் குடும்பத்தினருக்கு 25 லட்ச ரூபாய் வழங்கத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் சுகாதார ஊழியர்கள், போலீசார் எனப் பலரும் வைரஸ் தொற்று காரணமாகவே உயிரிழக்கும் துயரங்களும் அரங்கேறியுள்ளன. இந்நிலையில், தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்த 36 காவலர்களின் குடும்பத்தினருக்கு 25 லட்ச ரூபாய் வழங்கத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழகத்தில் கோவிட்-19 நோய்த்தொற்று பரவுதலைத் தடுக்கும் விதத்தில் அரசுத் துறையைச் சார்ந்த…

Read More

12ம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அலகுத் தேர்வு! தமிழக அரசு அதிரடி

கொரோனா இரண்டாம் அலையாக தமிழகத்தில் தீவிரமாக பரவி வருகிறது. நாள்தோறும் ஆயிரக் கணக்கான மக்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அலகுத் தேர்வு நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 10ம் தேதி முதல் வரும் 24ம் தேதி வரையில் இந்த ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. வாட்ஸ்-அப் குழு வாட்ஸ்-அப் செயலியில் மாணவிகளுக்கு தனிக் குழுவும், மாணவர்களுக்கு தனிக் குழுவும் ஏற்படுத்த வேண்டும். இந்த வாட்ஸ்-அப் குழுவில் தனித்தனியாக வினாத்தாள்களை அனுப்ப வேண்டும். மாணவ, மாணவிகள் வினாத்தாளைப் பார்த்து அதற்குரிய விடைகளை…

Read More

விருதுநகர் மாவட்ட மக்களே கொரோனா படுக்கை வசதியை அறிய…

அரசு, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா படுக்கை வசதி இருப்பை அறிந்து கொள்ள, ஆக்சிஜன் வசதி பெறுவது தொடர்பாக, கொரோனா தொ விருதுநகர் மாவட்ட மக்களே கொரோனா படுக்கை வசதியை அறிய… டர்பான பிற தகவல்களுக்கு விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் ‘கோவிட் 19 கட்டளை அறையை’ தொடர்பு கொள்ளலாம். கட்டணமில்லா தொலைபேசி 1077 தொலைபேசி04562 – 252 09404562 – 252 09504562 – 252 09604562 – 252 097

Read More

570 பேருக்கு கொரோனா

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மட்டும் ஒரே நாளில் 570 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. 402 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மூவர் பலியாகி உள்ளனர். 3999 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு நடைமுறைகளும் தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகிறது. 2020ல் காய்கறிகள், மளிகை டோர் டெலிவரி, வீடு வீடாக கபசுர குடிநீர் விநியோகம், கிரிமிநாசினி தெளிப்பு போன்ற நடவடிக்கைகளை உள்ளாட்சி நிர்வாகங்கள் மேற்கொள்ள வேண்டும்.

Read More

தமிழகத்தில் ஐந்து மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்… தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் மதுரை, சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ஆட்சியர்களை மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சியமைத்தது முதலே பல்வேறு முக்கிய பதவிகளுக்கும் புதிய நபர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். தமிழ அரசின் புதிய தலைமை செயலராக வெ இறையன்பு நியமிக்கப்பட்டார். அதேபோல சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த பிரகாஷ் திறன் மேம்பாட்டுக் கழக இயக்குநராக மாற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக ககன்தீப் சிங் பேடி சென்னை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார், இந்நிலையில், மதுரை, சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ஆட்சியர்களை மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. திருச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த திவ்யதர்ஷினி தருமபுரி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். தொழில் மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் ஆணையராக இருந்த சிவராசு திருச்சி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். சிப்காட் நிர்வாக இயக்குநராக இருந்த அனீஷ் சேகர் மதுரை…

Read More

ரேஷன் கடைகளில் டோக்கன்: கேள்விக்குறியான அரசு உத்தரவு

விருதுநகர் : கொரோனா நிவாரண தொகை ரூ.2 ஆயிரத்துக்கான டோக்கன் வீடு தோறும் வழங்க அரசு உத்தரவிட்டும் ,அதை முறையாக பின்பற்றாததால் ரேஷன் கடைகளில் மக்கள் குவிவதால் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. விருதுநகரில் பல ரேஷன் கடைகளில் டோக்கன் விநியோகம் சரிவர நடக்கவில்லை. ரேஷன் கடை ஊழியர்கள் தங்களுக்கு தெரிந்தவர்கள், முக்கியஸ்தர்கள் மூலம் கொடுக்கின்றனர்.ஒரு சில கடை ஊழியர்கள் மட்டுமே நேரடியாக வீடுகளுக்கு செல்கின்றனர். பலர் கடையிலே இருக்கின்றனர். குழப்பமடையும் மக்கள் எங்கே டோக்கன் வாங்குவது என தெரியாது ரேஷன் கடைகளில் சமூக இடைவெளியின்றி குவிகின்றனர். இதனால் ரேஷன் கடைகள் தொற்று பரப்பும் மையங்களாக மாறிவிட்டன. மாவட்ட வழங்கல் அலுவலர், கூட்டுறவுத்துறை அதிகாரிகள் என பலர் இப்பணிக்கு பொறுப்பாக நியமிக்கப் பட்டிருந்தாலும் யாருமே முறையாக பணியை மேற்பார்வை செய்வதில்லை.பொதுமக்களும் நிவாரண தொகை கிடைக்காமல் போய் விடுமோ என்ற…

Read More

சேவை பணியில் தேவதைகளாகும் செவிலியர்கள்

நவீன செவிலியத்தை உருவாக்கிய பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த தினமான மே 12 உலக செவிலியர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. மக்களின் உடல் நலனை பேணுவதற்காக செவிலியர்கள் ஆற்றும் சேவையை நினைவு கூறவே இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.’ வழிநடத்த ஒரு குரல் – எதிர்கால சுகாதாரத்துக்கான பார்வை’ என்பது தான் இந்தாண்டு கருபொருள். நாளுக்கு நாள் பெருகி வரும் தொற்று அச்சுறுத்தலும், இதர பெரும் நோய் அபாயங்களில் இருந்து நம்மை மீட்பதில் சுகாதாரத்துறை பெரும் பாடுபட்டு வருகிறது. இதில் முக்கிய அங்கம் வகிக்கும் டாக்டர்களுக்கு அடுத்தப்படியாக செவிலியர்கள் உள்ளனர். தற்போதைய கொரோனா இரண்டாவது அலையிலும் செவிலியர்களின் சேவை தொடர்கிறது. முதல் பரவலின் போது செவிலியர்கள் பல்வேறு சிரமங்களை சமாளித்தனர். முழு பாதுகாப்பு கவச உடையில் தேவதைகளாக காட்சி அளிக்கும் செவிலியர்கள் கொரோனா நோயாளிகளை பத்திரமாக குணப்படுத்தி வீட்டிற்கு அனுப்புகின்றனர். இக்கடினமான சூழலிலும்…

Read More

சித்ரா பவுர்ணமி சிறப்பு பூஜைகள்

விருதுநகர் : விருதுநகர் அருகே எரிச்சநத்தத்தில் ஆதிசக்தி அன்னை ஸ்ரீமாசாணி அம்மன்தியான பீடம் கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அம்மனுக்கு 16 அபிேஷகம் செய்து நோய் நொடியிலிருந்து மக்களை காப்பாற்ற அம்மனிடம் வேண்டி வழிபாடு நடத்தப்பட்டது. பூஜைகளை பூஜாரிகள் நடத்தினர்.சிவகாசி: சிவகாசி நாரணாபுரம் ரோடு இந்திரா நகர் ஜடா முனீஸ்வரர் கோயிலில் சித்ரா பவுர்ணமி பூஜை நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.சிவகாசி சாட்சியாபுரம் தொழிற்பேட்டை முத்துமாரியம்மன் கோயில், ஆட்டோ ஸ்டாண்டு துர்கை பரமேஸ்வரி, பேச்சியம்மன், சிவன் கோயில், மாரியம்மன், பத்ரகாளியம்மன், திருத்தங்கல் சக்தி மாரியம்மன், கருநெல்லிநாதர் உள்ளிட்ட கோயில்களில் பவுர்ணமி பூஜை நடந்தது.

Read More

சரிசெய்யுங்க! டவர் இருந்தும் கிடைக்காத அலைபேசி சிக்னல்

சாத்துார் : -விருதுநகர் மாவட்டத்தில் போதிய நவர் இருந்தும் அலைபேசி சிக்னல் கிடைக்காத வாடிக்கையாளர்கள், கிடைக்கும் பகதிகளை நோக்கி செல்லும் அவலம் இன்றும் தொடர்கிறது. மாவட்டத்தில் கிராமங்கள் அதிகம் . இங்குதான் பெருமபாலான தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. இங்கு பணிபுரிபவர்கள் பலரும் நகர் பகுதியில் இருந்தே வேலைக்கு வந்து செல்கின்றனர். இவர்கள் தங்கள் தேவைக்கு தனியார், பி.எஸ்.என்.எல்., அலைபேசி சிம்களை பயன்படுத்துகின்றனர். நகர் பகுதிகளில் மட்டுமே அலைபேசி சிக்னல் கிடைக்கின்ற நிலையில் கிராமப்பகுதிகளுக்கு சென்று விட்டாள் சிக்னல் கிடைக்காமல் பலரும் அவதிக்கு உள்ளாகின்றனர் . தொடர்பு கொண்டால் சுவிட்ச்ஆப் இல்லையேல் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளார் என்ற பதிலையே கேட்கமுடிகிறது. பல கிராமங்களில் வீட்டைவிட்டு வெளியே வந்து பேசும் நிலை இன்றைக்கும் தொடர்கிறது. அவசர தேவைக்கு சிக்னலை தேடி அலையும் நிலையும் உள்ளது. வத்திராயிருப்பு , முதலிப்பட்டி இருக்கன்குடி,…

Read More