விருதுநகரில் பெருங்கற்கால இரும்பு உருக்கும் உலையின் தடயங்கள் கிடைத்துள்ளன

திருவில்லிபுத்தூர் அருகே வெங்கடேஸ்வரபுரத்தில் உள்ள ராமநாதபுரம் தொல்லியல் ஆராய்ச்சி அறக்கட்டளை மூலம் மெகாலிதிக் காலத்தைச்(பெருங்கற்காலம்) சேர்ந்த இரும்பு உருகும் உலை இருந்ததற்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
திருவில்லிபுத்தூர் அருகே வெங்கடேஸ்வரபுரத்தில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள்


விருதுநகர்: திருவில்லிபுத்தூர் அருகே வெங்கடேஸ்வரபுரத்தில் ராமநாதபுரம் தொல்லியல் ஆராய்ச்சி அறக்கட்டளை மூலம் மெகாலிதிக் காலத்தைச் (பெருங்கற்காலம்)சேர்ந்த இரும்பு உருகும் உலை இருந்ததற்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை குறைந்தது 4,000 ஆண்டுகள் பழமையானவை என்று அறக்கட்டளையின் தலைவர் வி.ராஜகுரு தெரிவித்தார்.

“இந்தப் பகுதியில் சுமார் ஒரு ஏக்கரில் இரும்புத் தாது, இரும்புக் கசடு, கருப்பு மற்றும் சிவப்பு பானை ஓடுகள், சில சுத்தியல்களின் உடைந்த பாகங்கள், டெரகோட்டா குழாய்கள் மற்றும் கவண் கல் ஆகியவை சிதறிக் கிடந்தன. அவை மெகாலிதிக் கால(பெருங்கற்காலம்) இரும்பு உலையின் தடயங்கள்,” என்றார்.
மேலும், வெங்கடேஸ்வரபுரத்தில் கிடைத்த பழங்கால பொருட்களும், கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில் மோடூர் அகழாய்வில் கிடைத்த இரும்பு உலையின் தடயங்களும் ஒரே மாதிரியானவை என ராஜகுரு தெரிவித்தார். மயிலாடும்பாறை அகழாய்வு தளத்தில் கிடைத்த மாதிரிகளின் காலவரிசைப்படி, 4,200 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு உபயோகம் பற்றி தமிழக மக்கள் அறிந்திருந்தனர் என்பதை உறுதிப்படுத்துகிறது.
அவர் பேசுகையில், “பெருங்கற்காலத்தில் வாழ்ந்தவர்கள் இயற்கையாகக் கிடைக்கும் இரும்புத் தாதுக்களை உலைகள் மூலம் உருக்கி இரும்பை எடுக்கும் தொழில்நுட்பத்தை நன்கு அறிந்திருந்தனர். கத்திகள், கோடாரிகள், ஈட்டிகள், விவசாயக் கருவிகள் போன்ற ஆயுதங்களை தயாரிப்பதற்கு இரும்பை பயன்படுத்தினர்.
ஸ்ரீவில்லிபுத்தூரை சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை இரும்பு தாதுக்கள் காணப்படுகின்றன. இதனால் இப்பகுதிகளில் பல இடங்களில் பெருங்கற்கால நினைவுச்சின்னங்கள் கொண்ட இரும்பு உலைகளின் தடயங்கள் காணப்படுகின்றன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

Compare